ஆசமனம்:-

வலது கையில் உத்தரணியால் மூன்று முறை ஜலத்தை எடுத்து பின்வரும் மந்திரத்துடன் உட்கொள்ளவும்.

  • ஓம் அச்யுதாய நம:
  • ஓம் அனந்தாய நம:
  • ஓம் கோ³விந்தா³ய நம:

கீழே உள்ள நாமாக்களை சொல்லியபடி வலது கை விரல்களால் அந்தந்த அங்கங்களை தொடவும்.

கேஶவகட்டை விரல்வலது கன்னம்
நாராயணகட்டை விரல்இடது கன்னம்
மாத⁴வாமோதிர விரல்வலது கண்
கோ³விந்தா³மோதிர விரல்இடது கண்
விஷ்ணுஆள்காட்டி விரல்வலது மூக்கு
மது⁴சூத³னாஆள்காட்டி விரல்இடது மூக்கு
த்ரிவிக்ரமசுண்டு விரல்வலது காது
வாமநசுண்டு விரல்இடது காது
ஶ்ரீத⁴ரநடுவிரலவலது தோள்
ஹ்ருஷீகேஶநடுவிரல்இடது தோள்
பத்³மநாபா⁴நான்கு விரல்கள்மார்பு
தா³மோத³ராஐந்து விரல்கள்தலை

ஸ்ரீ க³ணபதி த்⁴யானம்:-

நெற்றியின் இருபுறமும் இரண்டு கைகளால் மூன்று முறை குட்டிக் கொள்ளவும்.

ஶுக்லாம் ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்ப்பு⁴ஜம் । ப்ரஸன்ன வத³னம் த்⁴யாயேத் ஸர்வ விக்⁴நோப ஶாந்தயே ॥

ப்ராணாயாமம்:-

கட்டைவிரலால் மூக்கின் வலது பாகத்தை மூடிக்கொண்டு இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். பிறகு, மோதிர விரலால் மூக்கின் இடது பாகத்தை மூடிக் கொண்டு வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.

ஒம் பூ⁴: ஓம் பு⁴வ: ஓம் ஸ்வ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் ஸத்யம் |

ஓம் தத்ஸ॑॑॑॑॑॑வி॒துர்வரே॑ண்ய॒ம் ப⁴ர்கோ॑³ தே॒³வஸ்ய॑ தீ⁴மஹி । தி⁴யோ॒ யோந॑: ப்ரசோ॒த³யா॑॑த் ॥

ஓம் ஆபோ॒ ஜ்யோதீ॒ரஸோ॒ம்ருத॒ம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு⁴வ॒ஸ்வரோம் ।

ஸங்கல்பம்:-

வலது மற்றும் இடது உள்ளங்கைளை மூடியவாறு வலது தொடையின் மேல் வைத்தபடி சங்கல்பம் செய்யவும்.

மமோபாத்த ஸமஸ்த து³ரித க்ஷயத்³வாரா ஸ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த்²தம் ப்ராத: / ஸாயம் ஸமிதா³தா⁴னம் கரிஷ்யே.

ஹோம​ம்

ஒரு சமித்தை எடுத்து கீழே உள்ள மந்திரத்தை உச்சரித்து அக்னியில் சேர்க்கவும்.

அக்³னயே ஸமித⁴மாஹார்ஷம் ப்³ருஹதே ஜாதவேத³ஸே தயா த்வமக்³னே வர்த⁴ஸ்வ ஸமிதா⁴ ப்³ரஹ்மணா வயம் ஸ்வாஹா॑ । அக்³னயே ஸமித்³யமானாய இத³ம் ந மம ।

இரு கைகளையும் அக்னியின் வெப்பத்தில் கீழ்நோக்கி காண்பித்து முகத்தில் ஒத்திக்கொள்ளவும்.

ஓம் தேஜஸா மா ஸமனஜ்மி । ( x 3)

ஒரு சமித்தை அக்னியில் சேர்க்கவும்.

ஸ்வாஹா॑ ।

அக்னியை சுற்றி ஜலத்தில் பரிஷேசனம் செய்யவும்.

ஓம் பூ⁴ர்பு⁴வ​:ஸ்வ: । (x 3)

உபஸ்தா²னம்

அக்³னே: உபஸ்தா²னம் கரிஷ்யே ।

எழுந்து நின்று உபஸ்தானம் செய்யவும்.

மயி॑ மே॒தா⁴ம் மயி॑ ப்ர॒ஜாம் மய்ய॒க்³னி: தேஜோ॑ த³தா⁴து । மயி॑ மே॒தா⁴ம் மயி॑ ப்ர॒ஜாம் மயீந்த்³ர॑ இந்த்³ரி॒யம் த³தா⁴து । மயி॑ மே॒தா⁴ம் மயி॑ ப்ர॒ஜாம் மயி॒ ஸூர்யோ॒ ப்⁴ராஜோ॑ த³தா⁴து । அக்³னயே நம​: ।

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் ப⁴க்திஹீனம் ஹுதாஶனா । யத்³து⁴தம் து மயா தே³வ பரிபூர்ணம் தத³ஸ்து தே ॥ ப்ராயஶ்சித்தான்யஶேஷாணி தப​: கர்மாத்மகானி வை । யானி தேஷாமஶேஷாணாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம் ॥

க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண । ( x 4)

அபி⁴வாத³ நமஸ்கார​:

அபிவாதயே கூறி நமஸ்காரம் செய்யவும்.

அபி⁴வாத³யே _ த்ரயார்ஷேய ​/ பஞ்சார்ஷேய ப்ரவரான்வித கோ³த்ர​: ஆஶ்வலாயன ஸூத்ர​: ருʼக்³வேதா³ந்தர்க³த ஶாகல ஶாகா²த்⁴யாயீ __ ஶர்மா நாம அஹம்ʼ அஸ்மி போ⁴:.

ப⁴ஸ்மதா⁴ரணம்

ஹோம பாஸ்மாவை எடுத்து இடது உள்ளங்கையில் ஒரு சொட்டு ஜலம் ஊற்றி கீழ்க்காணும் மந்திரத்தை உச்சரித்து மோதிர விரலால் குழைக்க வேண்டும்.

  • த்ரயாயுஷம் ஜமத³க்³னே: – (நெற்றி)
  • கஶ்யபஸ்ய த்ரயாயுஷம் – (கழுத்து)
  • அக³ஸ்த்யஸ்ய த்ரயாயுஷம் – (தொப்புள்)
  • யத்³தே³வானாம் த்ரயாயுஷம் – (வலது தோள் )
  • தன்மே அஸ்து த்ரயாயுஷம் – (இடது தோள் )
  • ஸர்வமஸ்து த்ரயாயுஷம் – (பின் கழுத்து )
  • ப³லாயுஷம் – (தலை)

ப்ரார்த²னா

ஓம் ஸ்வஸ்தி ஶ்ரத்³தா⁴ம் மேதா⁴ம் யஶ: ப்ரஜ்ஞாம் வித்³யாம் பு³த்³தி⁴ம் ஶ்ரியம் ப³லம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்³யம் தே³ஹி மே ஹவ்யவாஹன । ஶ்ரியம் தே³ஹி மே ஹவ்யவாஹன ஓம் நம இதி ।

கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்லி வலது கையில் ஒரு உத்தரணி ஜலம் எடுத்து கீழே விட்டு நமஸ்காரம் செய்யவும்.

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்⁴யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபா⁴வாத் । கரோமி யத்³யத்ஸகலம் பரஸ்மை நாராயாணாயேதி ஸமர்பயாமி ॥

|| ஓம் தத்ஸத் ப்³ரஹ்மார்பணமஸ்து ||

Read also in: English (IAST) देवनागरी தமிழ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன