श्रीरमणमहर्षिकृतम्
மங்கலம்
உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு
ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா — லுள்ளமெனு
முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுணர்.
uḷḷadala duḷḷavuṇar vuḷḷadō vuḷḷaporu
ḷuḷḷalaṟa vuḷḷattē yuḷḷadā — luḷḷameṉu
muḷḷaporu ḷuḷḷaleva ṉuḷḷattē yuḷḷapaḍi
yuḷḷadē yuḷḷa luṇar
மரணபய மிக்குளவம் மக்களர ணாக
மரணபவ மில்லா மகேசன் — சரணமே
சார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்
சார்வரோ சாவா தவர்.
maraṇabhaya mikkuḷavam makkaḷara ṇāha
maraṇabhava millā mahēśaṉ — caraṇamē
sārvartañ cārvoḍutāñ cāvuṯṟār sāveṇṇañ
cārvarō sāvā davar
நூல்
நாமுலகங் காண்டலா னானாவாஞ் சத்தியுள
வோர்முதலை யொப்ப லொருதலையே — நாமவுருச்
சித்திரமும் பார்ப்பானுஞ் சேர்படமு மாரொளியு
மத்தனையுந் தானா மவன்.
॥१॥nāmulahaṅ kāṇḍalā ṉāṉāvāñ cattiyuḷa
vōrmudalai yoppa lorutalaiyē — nāmavuruc
cittiramum pārppāṉuñ cērpaḍamu māroḷiyu
mattaṉaiyun tāṉā mavaṉ
மும்முதலை யெம்மதமு முற்கொள்ளு மோர்முதலே
மும்முதலாய் நிற்குமென்று மும்முதலு — மும்முதலே
யென்னலகங் கார மிருக்குமட்டே யான்கெட்டுத்
தன்னிலையி னிற்ற றலை.
॥२॥mummudalai yemmatamu muṯkoḷḷu mōrmudalē
mummudalāy niṯkumeṉḏṟu mummudalu — mummudalē
yeṉṉalahaṅ kāra mirukkumaṭṭē yāṉkeṭṭut
taṉṉilaiyi ṉiṯṟa ṯalai
உலகுமெய்பொய்த் தோற்ற முலகறிவா மன்றென்
றுலகுசுக மன்றென் றுரைத்தெ — னுலகுவிட்டுத்
தன்னையோர்ந் தொன்றிரண்டு தானற்று நானற்ற
வந்நிலையெல் லார்க்குமொப் பாம்.
॥३॥ulahumeypoyt tōṯṟa mulahaṟivā maṉḏṟeṉ
ḏṟulahusukha maṉḏṟeṉ ḏṟuraitte — ṉulahuviṭṭut
taṉṉaiyōrn doṉḏṟiraṇḍu tāṉaṯṟu nāṉaṯṟa
vannilaiyel lārkkumop pām
உருவந்தா னாயி னுலகுபர மற்றா
முருவந்தா னன்றே லுவற்றி — னுருவத்தைக்
கண்ணுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ
கண்ணதுதா னந்தமிலாக் கண்.
॥४॥uruvandā ṉāyi ṉulahupara maṯṟā
muruvandā ṉaṉḏṟē luvaṯṟi — ṉuruvattaik
kaṇṇuṟudal yāvaṉevaṉ kaṇṇalāṯ kāṭciyuṇḍō
kaṇṇadutā ṉantamilāk kaṇ
உடல்பஞ்ச கோச வுருவதனா லைந்து
முடலென்னுஞ் சொல்லி லொடுங்கு — முடலன்றி
யுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக்
கண்டா ருளரோ கழறு.
॥५॥uḍalpañca kōśa vuruvadaṉā laindu
muḍaleṉṉuñ colli loḍuṅgu — muḍalaṉḏṟi
yuṇḍō vulaha muḍalviṭ ṭulahattaik
kaṇḍā ruḷarō kaṙaṟu
உலகைம் புலன்க ளுருவேறன் றவ்வைம்
புலனைம் பொறிக்குப் புலனா — முலகைமன
மொன்றைம் பொறிவாயா லோர்ந்திடுத லான்மனத்தை
யன்றியுல குண்டோ வறை.
॥६॥ulahaim pulaṉga ḷuruvēṟaṉ ḏṟavvaim
pulaṉaim poṟikkup pulaṉā — mulahaimaṉa
moṉḏṟaim poṟivāyā lōrndiḍuda lāṉmaṉattai
yaṉḏṟiyula kuṇḍō vaṟai
உலகறிவு மொன்றா யுதித்தொடுங்கு மேனு
முலகறிவு தன்னா லொளிரு — முலகறிவு
தோன்றிமறை தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும்
பூன்றமா மஃதே பொருள்.
॥७॥ulahaṟivu moṉḏṟā yudittoḍuṅgu mēṉu
mulahaṟivu taṉṉā loḷiru — mulahaṟivu
tōṉḏṟimaṟai daṯkiḍaṉāyt tōṉḏṟimaṟai yādoḷirum
pūṉḏṟamā maḵdē poruḷ
எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி
லப்பொருளைக் காண்வழிய தாயினுமம் — மெய்ப்பொருளி
னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே
யுண்மையிற் காண லுணர்.
॥८॥eppeyariṭ ṭevvuruvi lēttiṉumār pēruruvi
lapporuḷaik kāṇvaṙiya dāyiṉumam — meypporuḷi
ṉuṇmaiyiṯṟa ṉuṇmaiyiṉai yōrndoḍuṅgi yoṉḏṟudalē
yuṇmaiyiṯ kāṇa luṇar
இரட்டைகண் முப்புடிக ளென்றுமொன்று பற்றி
யிருப்பவா மவ்வொன்றே தென்று — கருத்தினுட்
கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை
கண்டார் கலங்காரே காண்.
॥९॥iraṭṭaigaṇ muppuḍiga ḷeṉḏṟumoṉḏṟu paṯṟi
yiruppavā mavvoṉḏṟē teṉḏṟu — karuttiṉuṭ
kaṇḍāṯ kaṙalumavai kaṇḍava rēyuṇmai
kaṇḍār kalaṅgārē kāṇ
அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ்
வறியாமை யின்றாகு மந்த — வறிவு
மறியா மையுமார்க்கென் றம்முதலாந் தன்னை
யறியு மறிவே யறிவு.
॥१०॥aṟiyāmai viṭṭaṟiviṉ ḏṟāmaṟivu viṭṭav
vaṟiyāmai yiṉḏṟāhu manda — vaṟivu
maṟiyā maiyumārkkeṉ ḏṟammudalān taṉṉai
yaṟiyu maṟivē yaṟivu
அறிவுறுந் தன்னை யறியா தயலை
யறிவ தறியாமை யன்றி — யறிவோ
வறிவயற் காதாரத் தன்னை யறிய
வறிவறி யாமை யறும்.
॥११॥aṟivuṟun taṉṉai yaṟiyā dayalai
yaṟiva daṟiyāmai yaṉḏṟi — yaṟivō
vaṟivayaṯ kādhārat taṉṉai yaṟiya
vaṟivaṟi yāmai yaṟum
அறிவறி யாமையு மற்றதறி வாமே
யறியும துண்மையறி வாகா — தறிதற்
கறிவித்தற் கன்னியமின் றாயவிர்வ தாற்றா
னறிவாகும் பாழன் றறி.
॥१२॥aṟivaṟi yāmaiyu maṯṟadaṟi vāmē
yaṟiyuma duṇmaiyaṟi vāhā — daṟitaṯ
kaṟivittaṯ kaṉṉiyamiṉ ḏṟāyavirva dāṯṟā
ṉaṟivāhum pāṙaṉ ḏṟaṟi
ஞானமாந் தானேமெய் நானாவா ஞானமஞ்
ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே — ஞானமாந்
தன்னையன்றி யின்றணிக டாம்பலவும் பொய்மெய்யாம்
பொன்னையன்றி யுண்டோ புகல்.
॥१३॥ñāṉamān tāṉēmey nāṉāvā ñāṉamañ
ñāṉamām poyyāmañ ñāṉamumē — ñāṉamān
taṉṉaiyaṉḏṟi yiṉḏṟaṇiga ḍāmpalavum poymeyyām
poṉṉaiyaṉḏṟi yuṇḍō puhal
தன்மையுண்டேன் முன்னிலைப டர்க்கைக டாமுளவாந்
தன்மையி னுண்மையைத் தானாய்ந்து — தன்மையறின்
முன்னிலைப டர்க்கை முடிவுற்றொன் றாயொளிருந்
தன்மையே தன்னிலைமை தான்.
॥१४॥taṉmaiyuṇḍēṉ muṉṉilaipa ḍarkkaiga ḍāmuḷavān
taṉmaiyi ṉuṇmaiyait tāṉāyndu — taṉmaiyaṟiṉ
muṉṉilaipa ḍarkkai muḍivuṯṟoṉ ḏṟāyoḷirun
taṉmaiyē taṉṉilaimai tāṉ
நிகழ்வினைப் பற்றி யிறப்பெதிர்வு நிற்ப
நிகழ்கா லவையு நிகழ்வே — நிகழ்வொன்றே
யின்றுண்மை தேரா திறப்பெதிர்வு தேரவுன
லொன்றின்றி யெண்ண வுனல்.
॥१५॥nihaṙviṉaip paṯṟi yiṟappedirvu niṯpa
nihaṙkā lavaiyu nihaṙvē — nihaṙvoṉḏṟē
yiṉḏṟuṇmai tērā tiṟappedirvu tēravuṉa
loṉḏṟiṉṟi yeṇṇa vuṉal
நாமன்றி நாளேது நாடேது நாடுங்கா
னாமுடம்பே னாணாட்டு ணாம்படுவ — நாமுடம்போ
நாமின்றன் றென்றுமொன்று நாடிங்கங் கெங்குமொன்றா
னாமுண்டு நாணாடி னாம்.
॥१६॥nāmaṉḏṟi nāḷēdu nāḍēdu nāḍuṅgā
ṉāmuḍambē ṉāṇāṭṭu ṇāmpaḍuva — nāmuḍambō
nāmiṉḏṟaṉ ḏṟeṉḏṟumoṉḏṟu nāḍiṅgaṅ geṅgumoṉḏṟā
ṉāmuṇḍu nāṇāḍi ṉām
உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க்
குடலளவே நான்ற னுணரார்க் — குடலுள்ளே
தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே
யின்னவர்தம் பேதமென வெண்.
॥१७॥uḍaṉāṉē taṉṉai yuṇarārk kuṇarndārk
kuḍalaḷavē nāṉḏṟa ṉuṇarārk — kuḍaluḷḷē
taṉṉuṇarndārk kellaiyaṟat tāṉoḷiru nāṉiduvē
yiṉṉavartam bhēdameṉa veṇ
உலகுண்மை யாகு முணர்வில்லார்க் குள்ளார்க்
குலகளவா முண்மை யுணரார்க் — குலகினுக்
காதார மாயுருவற் றாருமுணர்ந் தாருண்மை
யீதாகும் பேதமிவர்க் கெண்.
॥१८॥ulahuṇmai yāhu muṇarvillārk kuḷḷārk
kulahaḷavā muṇmai yuṇarārk — kulahiṉuk
kādhāra māyuruvaṯ ṟārumuṇarn dāruṇmai
yīdāhum bhēdamivark keṇ
விதிமதி மூல விவேக மிலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம் — விதிமதிகட்
கோர்முதலாந் தன்னை யுணர்ந்தா ரவைதணந்தார்
சார்வரோ பின்னுமவை சாற்று.
॥१९॥vidhimati mūla vivēka milārkkē
vidhimati vellum vivādam — vidhimatigaṭ
kōrmudalān taṉṉai yuṇarndā ravaitaṇandār
sārvarō piṉṉumavai sāṯṟu
காணுந் தனைவிட்டுத் தான்கடவு ளைக்காணல்
காணு மனோமயமாங் காட்சிதனைக் — காணுமவன்
றான்கடவுள் கண்டானாந் தன்முதலைத் தான்முதல்போய்த்
தான்கடவு ளன்றியில தால்.
॥२०॥kāṇun taṉaiviṭṭut tāṉkaḍavu ḷaikkāṇal
kāṇu maṉōmayamāṅ kāṭcitaṉaik — kāṇumavaṉ
ḏṟāṉkaḍavuḷ kaṇḍāṉān taṉmudalait tāṉmudalpōyt
tāṉkaḍavu ḷaṉḏṟiyila dāl
தன்னைத்தான் காண றலைவன் றனைக்காண
லென்னும்பன் னூலுண்மை யென்னையெனின் — றன்னைத்தான்
காணலெவன் றானொன்றாற் காணவொணா தேற்றலைவற்
காணலெவ னூணாதல் காண்.
॥२१॥taṉṉaittāṉ kāṇa ṯalaivaṉ ḏṟaṉaikkāṇa
leṉṉumpaṉ ṉūluṇmai yeṉṉaiyeṉiṉ — ḏṟaṉṉaittāṉ
kāṇalevaṉ ḏṟāṉoṉḏṟāṯ kāṇavoṇā dēṯṟalaivaṯ
kāṇaleva ṉūṇādal kāṇ
மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு
மதியினை யுள்ளே மடக்கிப் — பதியிற்
பதித்திடுத லன்றிப் பதியை மதியான்
மதித்திடுத லெங்ஙன் மதி.
॥२२॥matikkoḷi tandam matikku ḷoḷiru
matiyiṉai yuḷḷē maḍakkip — patiyiṯ
padittiḍuda laṉḏṟip patiyai matiyāṉ
madittiḍuda leṅṅaṉ madi
நானென்றித் தேக நவிலா துறக்கத்து
நானின்றென் றாரு நவில்வதிலை — நானொன்
றெழுந்தபி னெல்லா மெழுமிந்த நானெங்
கெழுமென்று நுண்மதியா லெண்.
॥२३॥nāṉeṉḏṟid dēha navilā duṟakkattu
nāṉiṉḏṟeṉ ḏṟāru navilvadilai — nāṉoṉ
ḏṟeṙundapi ṉellā meṙuminda nāṉeṅ
geṙumeṉḏṟu nuṇmatiyā leṇ
சடவுடனா னென்னாது சச்சித் துதியா
துடலளவா நானொன் றுதிக்கு — மிடையிலிது
சிச்சடக்கி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை
யிச்சமு சாரமன மெண்.
॥२४॥jaḍavuḍaṉā ṉeṉṉādu saccit tudiyā
duḍalaḷavā nāṉoṉ ḏṟudikku — miḍaiyilidu
ciccaḍakki ranthibandhañ jīvaṉuṭpa meyyahandai
yiccamu sāramaṉa meṇ
உருப்பற்றி யுண்டா முருப்பற்றி நிற்கு
முருப்பற்றி யுண்டுமிக வோங்கு — முருவிட்
டுருப்பற்றுந் தேடினா லோட்டம் பிடிக்கு
முருவற்ற பேயகந்தை யோர்.
॥२५॥uruppaṯṟi yuṇḍā muruppaṯṟi niṯku
muruppaṯṟi yuṇḍumiha vōṅgu — muruviṭ
ṭuruppaṯṟun tēḍiṉā lōṭṭam piḍikku
muruvaṯṟa pēyahandai yōr
அகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகு
மகந்தையின் றேலின் றனைத்து — மகந்தையே
யாவுமா மாதலால் யாதிதென்று நாடலே
யோவுதல் யாவுமென வோர்.
॥२६॥ahandaiyuṇ ḍāyi ṉaṉaittumuṇ ḍāhu
mahandaiyiṉ ḏṟēliṉ ḏṟaṉaittu — mahandaiyē
yāvumā mādalāl yādideṉḏṟu nāḍalē
yōvudal yāvumeṉa vōr
நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ளநிலை
நானுதிக்குந் தானமதை நாடாம — னானுதியாத்
தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந்
தன்னிலையி னிற்பதெவன் சாற்று.
॥२७॥nāṉudiyā duḷḷanilai nāmaduvā yuḷḷanilai
nāṉudikkun thāṉamadai nāḍāma — ṉāṉudiyāt
taṉṉiṙappaic cārvadevaṉ sārāmaṯ ṟāṉaduvān
taṉṉilaiyi ṉiṯpadevaṉ sāṯṟu
எழும்பு மகந்தை யெழுமிடத்தை நீரில்
விழுந்த பொருள்காண வேண்டி — முழுகுதல்போற்
கூர்ந்தமதி யாற்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே
யாழ்ந்தறிய வேண்டு மறி.
॥२८॥eṙumbu mahandai yeṙumiḍattai nīril
viṙunda poruḷkāṇa vēṇḍi — muṙuhudalpōṯ
kūrndamati yāṯpēccu mūccaḍakkik koṇḍuḷḷē
yāṙndaṟiya vēṇḍu maṟi
நானென்று வாயா னவிலாதுள் ளாழ்மனத்தா
னானென்றெங் குந்துமென நாடுதலே — ஞானநெறி
யாமன்றி யன்றிதுநா னாமதுவென் றுன்னறுணை
யாமதுவி சாரமா மா.
॥२९॥nāṉeṉḏṟu vāyā ṉavilāduḷ ḷāṙmaṉattā
ṉāṉeṉḏṟeṅ gundumeṉa nāḍudalē — ñāṉaneṟi
yāmaṉḏṟi yaṉḏṟidunā ṉāmaduveṉ ḏṟuṉṉaṟuṇai
yāmaduvi cāramā mā
நானா ரெனமனமுண் ணாடியுள நண்ணவே
நானா மவன்றலை நாணமுற — நானானாத்
தோன்றுமொன்று தானாகத் தோன்றினுநா னன்றுபொருள்
பூன்றமது தானாம் பொருள்.
॥३०॥nāṉā reṉamaṉamuṇ ṇāḍiyuḷa naṇṇavē
nāṉā mavaṉḏṟalai nāṇamuṟa — nāṉāṉāt
tōṉḏṟumoṉḏṟu tāṉāhat tōṉḏṟiṉunā ṉaṉḏṟuporuḷ
pūṉḏṟamadu tāṉām poruḷ
தன்னை யழித்தெழுந்த தன்மயா னந்தருக்
கென்னை யுளதொன் றியற்றுதற்குத் — தன்னையலா
தன்னிய மொன்று மறியா ரவர்நிலைமை
யின்னதென் றுன்ன லெவன்.
॥३१॥taṉṉai yaṙitteṙunda taṉmayā ṉandaruk
keṉṉai yuḷadoṉ ḏṟiyaṯṟudaṯkut — taṉṉaiyalā
taṉṉiya moṉḏṟu maṟiyā ravarnilaimai
yiṉṉadeṉ ḏṟuṉṉa levaṉ
அதுநீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை
யெதுவென்று தான்றேர்ந் திராஅ — ததுநா
னிதுவன்றென் றெண்ணலுர னின்மையினா லென்று
மதுவேதா னாயமர்வ தால்.
॥३२॥adunīyeṉ ḏṟammaṟaiga ḷārttiḍavun taṉṉai
yeduveṉḏṟu tāṉḏṟērn dirāa — dadunā
ṉiduvaṉḏṟeṉ ḏṟeṇṇalura ṉiṉmaiyiṉā leṉḏṟu
maduvētā ṉāyamarva dāl
என்னை யறியேனா னென்னை யறிந்தேனா
னென்ன னகைப்புக் கிடனாகு — மென்னை
தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா
யனைவரனு பூதியுண்மை யால்.
॥३३॥eṉṉai yaṟiyēṉā ṉeṉṉai yaṟindēṉā
ṉeṉṉa ṉahaippuk kiḍaṉāhu — meṉṉai
taṉaiviḍaya mākkaviru tāṉuṇḍō voṉḏṟā
yaṉaivaraṉu bhūtiyuṇmai yāl
என்று மெவர்க்கு மியல்பா யுளபொருளை
யொன்று முளத்து ளுணர்ந்துநிலை — நின்றிடா
துண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே
சண்டையிடன் மாயைச் சழக்கு.
॥३४॥eṉḏṟu mevarkku miyalbā yuḷaporuḷai
yoṉḏṟu muḷattu ḷuṇarndunilai — niṉḏṟiḍā
duṇḍiṉ ḏṟuruvaruveṉ ḏṟoṉḏṟiraṇ ḍaṉḏṟeṉḏṟē
caṇḍaiyiḍaṉ māyaic caṙakku
சித்தமா யுள்பொருளைத் தேர்ந்திருத்தல் சித்திபிற
சித்தியெலாஞ் சொப்பனமார் சித்திகளே — நித்திரைவிட்
டோர்ந்தா லவைமெய்யோ வுண்மைநிலை நின்றுபொய்ம்மை
தீர்ந்தார் தியங்குவரோ தேர்.
॥३५॥siddhamā yuḷporuḷait tērndiruttal siddhipiṟa
siddhiyelāñ soppaṉamār siddhikaḷē — niddiraiviṭ
ṭōrndā lavaimeyyō vuṇmainilai niṉḏṟupoymmai
tīrndār tiyaṅguvarō tēr
நாமுடலென் றெண்ணினல நாமதுவென் றெண்ணுமது
நாமதுவா நிற்பதற்கு நற்றுணையே — யாமென்று
நாமதுவென் றெண்ணுவதே னான்மனித னென்றெணுமோ
நாமதுவா நிற்குமத னால்.
॥३६॥nāmuḍaleṉ ḏṟeṇṇiṉala nāmaduveṉ ḏṟeṇṇumadu
nāmaduvā niṯpadaṯku naṯṟuṇaiyē — yāmeṉḏṟu
nāmaduveṉ ḏṟeṇṇuvadē ṉāṉmaṉida ṉeṉḏṟeṇumō
nāmaduvā niṯkumada ṉāl
சாதகத்தி லேதுவிதஞ் சாத்தியத்தி லத்துவித
மோதுகின்ற வாதமது முண்மையல — வாதரவாய்த்
தான்றேடுங் காலுந் தனையடைந்த காலத்துந்
தான்றசம னன்றியார் தான்.
॥३७॥sādhakatti lēduvitañ sāddhiyatti ladduvita
mōdugiṉḏṟa vādamadu muṇmaiyala — vādaravāyt
tāṉḏṟēḍuṅ kālun taṉaiyaḍainda kālattun
tāṉḏṟaśama ṉaṉḏṟiyār tāṉ
வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம்
வினைமுதலா ரென்று வினவித் — தனையறியக்
கர்த்தத் துவம்போய்க் கருமமூன் றுங்கழலு
நித்தமா முத்தி நிலை.
॥३८॥viṉaimudaṉā māyiṉ viḷaipayaṉ ḏṟuyppōm
viṉaimudalā reṉḏṟu viṉavit — taṉaiyaṟiyak
karttat tuvampōyk karumamūṉ ḏṟuṅkaṙalu
nittamā mutti nilai
பத்தனா னென்னுமட்டே பந்தமுத்தி சிந்தனைகள்
பத்தனா ரென்றுதன்னைப் பார்க்குங்காற் — சித்தமாய்
நித்தமுத்தன் றானிற்க நிற்காதேற் பந்தசிந்தை
முத்திசிந்தை முன்னிற்கு மோ.
॥३९॥baddhaṉā ṉeṉṉumaṭṭē bandhamutti cintaṉaigaḷ
baddhaṉā reṉḏṟutaṉṉaip pārkkuṅgāṯ — siddhamāy
nittamuttaṉ ḏṟāṉiṯka niṯkādēṯ bandacintai
mutticintai muṉṉiṯku mō
உருவ மருவ முருவருவ மூன்றா
முறுமுத்தி யென்னி லுரைப்ப — னுருவ
மருவ முருவருவ மாயு மகந்தை
யுருவழிதன் முத்தி யுணர்.
॥४०॥uruva maruva muruvaruva mūṉḏṟā
muṟumutti yeṉṉi luraippa — ṉuruva
maruva muruvaruva māyu mahandai
yuruvaṙitaṉ mutti yuṇar